சினிமா நடிகைகளுக்கு இணையாக தற்போது சீரியல் நடிகைகள் பலரும் சோசியல் மீடியாவில் விதவிதமான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் திறமையை விட தனது அழகை காண்பித்து வாய்ப்புகளை வளச்சிப் போடலாம் என பல நடிகைகளும் நினைத்து வருகின்றனர்.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் ரச்சிதா. மேலும் இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்து வந்த தினேஷ் என்பவரை காதலித்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு இத்தனை ஆண்டுகாலமாக சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரச்சிதா தனது கணவருடன் பேசி ஒரு வருடங்கள் ஆகிறது என அவர் கூறியது. பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியால் இவர்களுக்கு விவாகரத்து ஆகி விட்டதா என பல ரூமர்களும் எழுந்தனர். ஆனால் இதுகுறித்து ரச்சிதா மற்றும் தினேஷ் எந்த ஒரு அதிகாரப்பூர்வ பதிலையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடைசியாக இவர் நடித்து வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து பாதியிலேயே விலகியுள்ளார். கன்னடத் திரைப்படம் மற்றும் வெப்சீரிஸ் போன்றவற்றிலும் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தியும் வெளியாகியது இதனை அடுத்து வெப்சீரிஸ் மற்றும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற காரணத்தினாலே சீரியலில் இருந்து அவர் விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடை அணிந்து செம கிளாமராக அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சிலவற்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.