அஜித்தின் பில்லா பட நயன்தாரா போல் போஸ் கொடுத்த ரட்சிதா.! புகைப்படத்தை பார்த்து மெர்சல் ஆகும் ரசிகர்கள்.!

ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர்பி இல் முன்னணி இடத்தை பிடிப்பதற்காக புது புது நிகழ்ச்சிகள் ரியாலிட்டி ஷோ சீரியல்கள் என ஒளிபரப்பி தங்களுடைய டிஆர்பியை அதிகரிக்க நினைக்கிறார்கள் அந்த வகையில் சன் தொலைக்காட்சி சீரியலை ஒளிபரப்பி தங்களுடைய டிஆர்பியை தக்க வைத்துக் கொண்டு வருகிறார்கள். எப்படியாவது சன் தொலைக்காட்சியை ஓவர்டேக் செய்ய வேண்டுமென பல தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன.

அந்தவகையில் விஜய் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ சீரியல்கள் என புதிது புதிதாக எதையாவது ஒளிபரப்பி ரசிகர்களிடமும் மக்களிடமும் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த சரவணன் மீனாட்சி என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சீரியலில் பல பாகங்களை எடுக்க முடியும் என காட்டியது விஜய் தொலைக்காட்சி தான்.

சரவணன் மீனாட்சி சீரியலை பல பாகங்களாக ஒளிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள் இந்த தொடரில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவர் ரக்ஷிதா. ரக்ஷிதாவை காணவே இந்த சீரியலை பல ரசிகர்கள் பார்ப்பார்கள். அதேபோல் சரவணன் மீனாட்சி தொடருக்காக நடிகை ரட்சிதா சிறந்த நடிகை என்ற விருதை பல முறை பெற்றுள்ளார். ரட்சிதா ஒரு முறை விருது வழங்கும் விழா மேடையில் எத்தனை சரவணன் மீனாட்சி வந்தாலும் நான் தான் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடிப்பேன் என மிகவும் திமிராக கூறினார்.

ratchitha
ratchitha

ஆனால் அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் எந்த ஒரு தொடரிலும் இவரைக் காண முடியவில்லை. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் ஆனால் சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டார்.

அப்படி இருக்கும் நிலையில் தற்போது இவர் கன்னட மொழியில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஹீரோயினாக இந்நிலையில் இவரின் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ratchitha
ratchitha

Leave a Comment