விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ஒரு சில சீரியல்கள் நிறைவடைந்து பல வருடங்கள் ஆனாலும் கூட ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது வரையிலும் நீங்கா இடம் பெற்றிருக்கும் சீரியல்களும் சின்னத்திரையில் இருந்து வருகிறது.
அந்த வகையில் மூன்று சீசன்கள் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்ற சீரியல்தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் இடம் பெற்றிருந்த அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்கள். அந்த வகையில் சரவணன் மீனாட்சி சீசன் 3ன் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி.
இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு தொடர்ந்து அனைத்து சின்னத்திரை தொலைக்காட்சிகளிலும் சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வந்தது. அதோடு சில நிகழ்ச்சிகளிலும் நடுவராகவும் பணியாற்றி வந்தார். இறுதியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடித்திருந்தார்.
இந்த சீரியலிற்க்கும் முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த நாச்சியார்புரம் சீரியல் தனது முன்னாள் கணவருடன் இணைந்து நடித்திருந்தார். இந்த சீரியலின் இவர்களின் ஜோடி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டது. பிறகு கொரோனா தாக்கத்தினால் இந்த சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ரக்ஷிதா மகாலட்சுமி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘இது சொல்லமரந்தகதை’ சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலின் கதையும் தனது வாழ்க்கையின் கதையும் ஒரே மாதிரி இருப்பதாக கூறியிருந்தார்.
மேலும் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதாக ஏராளமான ரசிகர்கள் இவரை பற்றிய ஆபாசமான கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு சமீபத்தில் விவாகரத்தை பெற்றது தெரியும்.
எனவே இரண்டாவது முறையாக யாரை திருமணம் செய்ய உள்ளீர்கள் என தொடர்ந்து ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் தற்போது அவர் ஒரு தயாரிப்பாளர் என்று கூறியுள்ளார். மேலும் அந்த தயாரிப்பாளர் சீரியல் தயாரிப்பாளரா, திரைப்பட படத்தயாரிப்பாளரா என்பது தெரியவில்லை ஆனால் ரக்ஷிதா மகாலட்சுமி 2-வது முறையாக தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்ய உள்ளார் என்பது மட்டும் தெரிய வருகிறது.