சீரியல்களின் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்தவர் ரச்சிதா. முதலில் கன்னட தொலைக்காட்சி ஒன்றில் அறிமுகமானார் அதன் பிறகு விஜய் டிவி தொலைக்காட்சியில் 2011 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்னும் சீரியலில் ஜோதி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து இளவரசி, சரவணன் மீனாட்சி சீசன் 2, சரவணன் மீனாட்சி சீசன் 3, நாச்சியார் புரம், நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2, இது சொல்ல மறந்த கதை போன்ற சீரியல்களில் நடித்துக் கொண்ட இவர் அவ்வபொழுது ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டார் அந்த வகையில் ஸ்டார் மியூசிக் சீசன் 2, ஜீ தமிழ் இல்ல பார்ட்டி, பிக் பாஸ் சீசன் 6 – ல் போட்டியாளராக பங்கு பெற்றார்.
இது தவிர பிக் பாஸ் கொண்டாட்டம் போன்றவற்றில் கலந்துகொண்டு அசத்தினார். இப்படி சின்னத்திரையில் தனது பயணத்தை சிறப்பாக ஆரம்பித்து நாளுக்கு நாள் முன்னேற்றிக் கொண்டு ஓடிக்கொண்டிருந்த ரச்சிதா தன்னுடன் சீரியல்களில் நடித்து வந்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக சில காலமாக இருவரும் தனியாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் வெகு விரைவிலேயே இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்ற வேளையில் பயில்வான் ரங்கநாதன் நடிகை ரச்சிதா குறித்து பேசியது இணையதள பக்கத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. ஏற்கனவே ரச்சிதா பிரபல சீரியல் இயக்குனர் ஒருவரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் பயில்வான ரங்கநாதன் பேட்டியில் சொன்னது.. தினேஷ், ரச்சிதா ஜோடி மறுபடியும் சேரும் அவர்களிடையே இருக்கும் கருத்து வேறுபாடு சரியாகிவிடும் என நம்பினார்கள் ஆனால் ரச்சிதா சுத்தமாகவே தினேஷை அறுத்து விட பார்த்துவிட்டார் விரைவில் அவர் காதலித்துக் கொண்டிருக்கும் இயக்குனர் யார் என்பதையும் ரசிகர்களுக்கு தெரிவிக்க போகிறார் என கூறியுள்ளார்.