நீ எல்லாம் எதுக்கு இருக்க… கழுத்தை நேரித்து கொல்ல முயன்றார்கள் – பழைய நினைவுகளை பகரும் ரச்சிதா.

ratchitha
ratchitha

விஜய் டிவி தொலைக்காட்சி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுக்க புதிய புதிய ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களை நடத்துவது வழக்கம் அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். கடந்த சில வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசன்னாக நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை ஐந்து சீசன்கள் முடிந்த நிலையில் 6 -வது சீசன் அண்மையில் தொடங்கியது. வழக்கம்போல உலகநாயகன் கமலஹாசன் தான் பிக்பாஸ் 6 வது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார் இதற்காக அவர் சம்பளம் முன்பை விட அதிகமாக வங்கி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 – ல் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அதில் ஜி பி முத்து மட்டும் சில காரணங்களால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் மற்றவர்கள் அனைவரும் எலிமினேஷன் ரவுண்டில் ஒவ்வொருவராக வெளியேறினார். தொடர்ந்து இப்பொழுதும் வாரம் வாரம் எலிமினேஷன் ரவுண்ட் நடந்து கொண்டே இருக்கிறது.

மேலும் இப்பொழுது இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் சிறந்த போட்டியாளர்களாக இருப்பதால் பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் யார் என்பதை கணிக்க முடியாமல் இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் பிக்பாஸ் வீட்டில் ரச்சிதா பேசியது வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

என் அப்பா ஒரு டிரைவர் என்னுடைய அம்மா படிக்கவில்லை எங்கள் வீட்டில் தினமும் நடக்கும் சண்டைகளை பார்த்து தான் வளர்ந்தேன். நான் சரியாக படிக்காததால் என் அம்மா என்னுடைய கழுத்தை நெறித்து நீ செத்துப் போ என்று சொல்வார் என தனது சோகத்தை கண்ணீர் விட்டு சக போட்டியாளர்களுடன் சொல்லி உள்ளார் அந்த வீடியோ மட்டும் தகவல்கள் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.