இதற்கு மேல் சீரியலில் நடிக்க மாட்டேன் என்று கூறிய பிரபல சீரியல் நடிகர் பிரஜின்.!

Prajin
Prajin

தொடர்ந்து பல ஆண்டு காலங்களாக சின்னத்திரையில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருக்கும் பலர் வெள்ளித்திரை நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தாலும் அதனை பயன்படுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து சின்னத்திரையில் நடித்து வருபவர்கள் ஏராளமானவர்கள் உள்ளார்கள் அந்த வகையில் முக்கியமான ஒரு நடிகர் தான் பிரஜின்.

விஜய் டிவி மற்றும் சன் டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களில் ஹீரோவாக நடித்து அசத்திய வந்தார். இதன் மூலம் தொடர்ந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து சின்னத்திரையில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக மாறினார்.

இவ்வாறு தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சின்னத்தம்பி சீரியல் இவருக்கு மிகப்பெரிய ஒரு வெற்றியை கொடுத்தது. இந்த சீரியல் 2017ஆம் ஆண்டு தொடங்கி 2019ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டு காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது.

இந்த சீரியல் முடிந்த நிலையில் அன்புடன் குஷி சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சில காரணங்களால் திடீரென்று பாதியிலேயே நின்றுவிட்டது. அதன் பிறகு வைதேகி வந்தால் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பிரஜின் இந்த சீரியலில் இருந்து திடீரென நீக்கப்பட்டார்.

மேலும் இந்த சீரியலும் சில நாட்களில் முடிந்து விட்டது.  சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும்  பிரஜின் சமீபத்தில் ரசிகர்களிடம் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் பொழுது இதற்குமேல் சீரியல்களை நடிக்க மாட்டேன் எனக் கூறிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஏனென்றால் இவர் ஏழு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளாராம் எனவே தொடர்ந்து நடித்து வருவதால் இதற்கு மேல் திரைப்படங்களில் மட்டும் தான் நடிப்பாராம் எனவே சீரியல்களின் நடிக்க வாய்ப்பு இல்லை எனக் கூறியுள்ளார். இவருடைய மனைவி சாண்ராவும் சீரியல்களில் நடித்து வந்த நிலையில் தற்போது இரட்டை குழந்தை இருப்பதால் அவர்களை பார்த்துக்கொள்ளும் வேலையில் பிசியாக இருந்து வருகிறாராம்.

இந்நிலையில் இருவருமே இதற்கு மேல் சீரியலில் நடிக்க மாட்டார்கள் என்பது தெரிய வருகிறது. பிரஜின் ஏற்கனவே சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.