இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய சீரியல் நடிகை பிரகதி!! வீடியோ இதோ!

Actress pragathi vathi comming dance video: பிரகதி இவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் முதலில் பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த வீட்ல விசேஷங்க என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் மேலும் தமிழில் பெரிய மருது, பாண்டியனின் ராஜ்ஜியத்தில், சிலம்பாட்டம், மார்க்கண்டேயன், சித்து பிளஸ் 2, யாகாவாராயினும் நாகாக்க, தாரை தப்பட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் தெலுங்குவில் நுவ்வே நுவ்வே, மிஸ்டர் பர்ஃபெக்ட், சங்கரா, தூக்குடு, பிருந்தாவனம், அதிதி, சம்பா, ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா, மை லவ் ஸ்டோரி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லமால் இவர் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார் அதில் சில வம்சம், யமுனா, அரண்மனைகிளி போன்றவையாகும்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அரண்மனைக்கிளி சீரியலில் நடித்து வருகிறார்.இவர் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ளார். அந்த நேரத்தில் போரடிக்காமல் இருப்பதற்காக அவரும் அவருடைய மகனும் இணைந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர். இவர் ஆடிய அந்த நடனம் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவில் உள்ளது. தற்போதுஅந்த வீடியோ சமூக வலைத்தளத்தில்  காட்டுத் தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ.