அண்மைகாலமாக வெள்ளித்திரை நடிகைகள் பட வாய்ப்பை அதிகமாக வைக்கிறார்களோ இல்லையோ.. சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்கள் தான் வெள்ளித்திரையில் பட வாய்ப்பு அதிகம் கைபற்றி அசத்தி வருகின்றனர்.
அதுவும் எடுத்த உடனேயே தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் படங்களில் நடிப்பதால் சின்னத்திரை பிரபலங்களின் மீடியா உலகில் உயர்ந்துகொண்டே போகிறனர். அந்த வகையில் சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி. வெள்ளித்திரையில் முதலில் rugged படத்தில் நடித்து முதலில் அறிமுகமானார்.
அதன்பின் அஜித்தின் வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார் வெள்ளித்திரையில் இப்படி ஓடிக்கொண்டு இருந்தாலும் மறுபக்கம் சின்னத்திரையிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார் சைத்ரா ரெட்டி.
இந்த சீரியல் முடிந்த பிறகு சன் டிவி பக்கம் தாவி தற்பொழுது கயல் சீரியலில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அந்த சீரியல் தான் தற்போது நம்பர் ஒன் செய்திகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து இவர் ஒரு விளம்பரப் படத்தில் நடித்துள்ளார்.
விளம்பர படம் முடிந்ததும் மகேஷ் பாபுவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு சில புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வைரல்லாகி கொண்டு இருக்கிறது இதோ நீங்களே பாருங்கள். சின்னத்திரை சீரியலில் நடித்து வந்தாலும் வெள்ளித்திரை வாய்ப்புகளை விடாமல் பயணித்துக் கொண்டு இருப்பதால் நிச்சயம் வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார் என கூறி பலரும் வருகின்றனர்.