கொரோனா உலகையே அச்சுறுத்தி வருகிறது தற்பொழுது அதன் பாதிப்பு இந்தியாவிலும் அதிகரித்து உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்த நிலையில் வீட்டில் முடங்கி உள்ள போரடிக்காமல் இருக்க புத்தகம் படிப்பது, ஓவியம் வரைவது, விழிப்புணர்வு வீடியோ ,சமைப்பது போன்றவற்றை செய்து பொழுதைக் கழித்து வருகின்றனர்.
சிலரோ இணையதளத்தில் சவால்விட்டு ட்ரெண்டிங்கில் வந்துகொண்டிருக்கின்றனர் அந்தவகையில் ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிக்கி சேலன்ஜ், காக்ரோச் சேலஞ்ச் போன்று பல்வேறு சவால்களை எடுத்து வருகிறார்கள். அத்தகைய சவால்கள் பிரபலம் அடைவதற்கு காரணம் சினிமா பிரபலங்களால் மட்டும் தான் ஆக முடியும் என்பதை மக்கள் உணர்ந்து இருந்த நிலையில் அப்படிப்பட்ட சாலைகளை சினிமா பிரபலங்கள் கையிலெடுத்து சவால்களை செய்து வருகிறார்கள் அத்தகைய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
அந்த வகையில் சவால்களில் மிகவும் பிரபலமானது தலைகீழாக நின்றபடி டி-ஷர்ட்டையும் அணிய வேண்டும்.இந்த சவாலை பல முன்னணி நடிகைகள் செய்து வந்தனர் அதிலும் குறிப்பாக சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான ரகுல் பிரீத் சிங் அவர்கள் அண்மையில் இதனை செய்து காட்டினார். இதனை தொடர்ந்து தற்பொழுது விஜய் டிவியில் பிரபலமான சின்னத்தம்பி சீரியலின் நாயகியான பவானி ரெட்டி அவர்கள் தலைகீழாக நின்றபடியே டி -ஷிர்ட்டை நின்றபடி அணியும் சவாலை ஏற்றார் அதன்படியே சிறப்பாக செய்து காட்டினார் அத்தகைய வீடியோ சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
#pavanireddy #serial pic.twitter.com/oyyeP8JBSK
— Tamil360Newz (@tamil360newz) April 19, 2020
பவானி ரெட்டி அவர்கள் சீரியலுக்கு முன்பாக சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது அதன் பின்புதான் சின்னதம்பி சீரியலுக்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ராசாத்தி என்ற சீரியலில் நடித்து வந்தார் இருப்பினும் தற்போது வேறு ஒருவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இத்தகைய சவாலின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்துள்ளார் அம்மணி.