தற்பொழுதுள்ள சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் தொடர்ந்து தங்களுடைய சோசியல் மீடியாவின் மூலம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். மேலும் இதன் மூலம் இவர்களுடைய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பிறகு ரசிகர்களின் ஆதரவும் கிடைக்கிறது.
இதன் மூலம் பலரும் சம்பாதித்து வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகள் இணைந்து நடனமாடி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் முக்கியமாக டிஆர்பியில் தொடர்ந்து முன்னணி வகித்து வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. பல திருப்பங்களுடன் மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது இவ்வாறு இந்த சீரியல் குடும்பத் தலைவி என்றால் எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்பதை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் தற்பொழுது இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கேரக்டரில் நடித்து வரும் சுஜித்ராவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இவரைத் தொடர்ந்து மேலும் இந்த சீரியலில் எழிலின் காதலியாக அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்த வரும் ரித்திகா இருவரும் இணைந்து தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்திலிருந்து சமீபத்தில் வெளிவந்த இரட்சிதமே பாடலுக்கு சம குத்தாட்டம் போட்டுள்ளார்கள்.
இதனை நடிகை ரித்திகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். ஏனென்றால் இந்த சீரியலில் சுஜித்ரா குடும்ப தலைவியாக மிகவும் அமைதியான பெண்ணாக நடித்திருக்கும் நிலையில் இதில் இவருடைய ஸ்டைல் மற்றும் நடனத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.