பொதுவாக சின்னத்திரையாக இருந்தாலும் வெள்ளித்திரையாக இருந்தாலும் ஒரு நடிகரோ அல்லது நடிகையோ நிலைத்து நிற்க வேண்டுமானால் அவர்களின் நடிப்புத் திறமை மட்டும் போதாது அதற்கென ஒரு தந்திர தன்மை இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே அவர்களால் தொடர்ந்து சினிமாவில் நீடிக்க முடியும்.
இவ்வாறு எதுவும் செய்யாமல் சில சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த விட்டு காணாமல் போனவர்கள் ஏராளமானவர்கள் உள்ளார்கள் அந்த வகையில் ஒருவர் தான் நடிகை சுகன்யா. இவர் 2003ஆம் ஆண்டு வெளிவந்த மிகப்பெரிய வெற்றியைப்பெற்ற ஆனந்தம் சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து அந்த சீரியலில் நடிகை சுகன்யா, டெல்லி குமார், பிருந்தா தாஸ், ஸ்ரீ பிரியா கமலேஷ் ஆகியோர்களும் நடித்திருந்தார்கள். என்னதான் அனைத்து நடிகர் நடிகைகளும் பிரபலமடைந்து இருந்தாலும் ஒட்டுமொத்த நடிகர் நடிகைகளையும் ஓவர்டேக் செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகர் வெங்கட் சுப்பிரமணியன்.
இவர் சின்னத்திரைக்கு அறிமுகமான முதல் சீரியலே அமோக வெற்றியைப் பெற்றது.அந்த வகையில் இந்த சீரியல் 1,297 எபிசோடுகளை தாண்டி கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஒளிபரப்பானது. அப்படிப் பார்க்கும் பொழுது 2003ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஒளிபரப்பானது.
வெங்கட் தமிழ் சின்னத்திரையில் பிரபலமடைந்து இருந்தாலும் இவர் தமிழர் அல்ல 1983ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி தெலுங்கானாவில் உள்ள வாரங்களில் பிறந்தார். பிறகு இவருக்கு அனைத்து மொழிகளும் தெரிந்த காரணத்தினால் தமிழிடம் பிரபலமடைந்தார் அந்தவகையில் தமிழில் ஏராளமான சீரியல்களில் நடித்து உள்ளார்.
குலதெய்வம், செல்லமே, உறவுகள் சங்கமம், ரோஜா கூட்டம், ராஜகுமாரி, கல்யாண பரிசு,அத்திப்பூக்கள், திருமதி செல்வம் போன்ற ஹிட்டடித்த செய்தவர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் நடனத்தின் மீது அதிக ஆர்வம் இருந்ததால் ஜோடி நம்பர் 1 சீசனில் கலந்து கொண்டார்.
பிறகு தனது நீண்ட நாள் காதலி நிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு மாயா என்ற பெயரில் அழகிய மகளும் உள்ளார். அவர் தனது மனைவி மற்றும் மகள் ஆகியவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.