serial actress new look photo:சின்னத்திரையில் நடிக்கும் கதாநாயகிகள் பெரும்பாலும் ஒரு குடும்பப் பெண்ணை போன்ற உடையை உடுத்தி நடிப்பது வழக்கம். ஆனால் அது சின்னத்திரையில் மட்டும் தான் நிஜ வாழ்க்கையில் அல்ல. பொதுவாகவே நடிகைகள் தங்களை பிரபலமாக்கி கொள்ள சமூக வலைத்தளங்களில் தங்களின் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிடுவார்கள். அந்த வகையில் சீரியல் நடிகை சரண்யா அவர் அரை டவுசர் ஆடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்னரே ஒரு சில படங்களில் நடித்துள்ளார் அதில் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற திரைப்படம் குறிப்பிடத்தக்கது. சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்காத நிலையில் சின்னத்திரைக்குள் அடி எடுத்து வைத்தார்.
நடிகை சரண்யா முதன்முதலாக விஜய் டிவியில் ஒளிபரப்பான “நெஞ்சம் மறப்பதில்லை” என்ற சீரியலில் தான் நடித்தார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை அடைந்தது. அப்பொழுதே நடிகை சரண்யா தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி கொண்டார். பின்னர் சன் டிவியில் வெளியான ‘ரன்’ என்ற சீரியலில் நடித்து பாதியில் விலகிவிட்டார்.
நடிகை சரண்யா இறுதியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆயுத எழுத்து’ என்ற சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியலும் சில நாட்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களின் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சரண்யா அவர்கள் விரைவில் அடுத்த ஒரு நல்ல சீரியலில் உங்களை சந்திப்பேன் என்றும் என் மேல் அன்பும் ஆதரவும் வைத்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
ஆயுத எழுத்து சீரியல் தொடங்கியதிலிருந்து ஒரே பிரச்சினையாகதான் உள்ளது. இந்த சீரியல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரமாக அஸ்மத் கான் மற்றும் ஸ்ரீத்து கிருஷ்ணன் நடித்து வந்தார்கள். எனவே இவர்கள் இருவரும் நீக்கப்பட்டார்கள். அதன்பிறகுதான் நெஞ்சம் மறப்பதில்லை சரண்யாவும் ஆனந்த் என்பவரும் ஆயுத எழுத்து சீரியலில் நடிக்கத் தொடங்கினார்கள்.