பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியல்கள் தொடர்ந்து சமீப காலங்களாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாகவே விஜய் டிவி ரசிகர்கள் விரும்பும் வகையில் பல சுவாரஸ்யமான கதைகள் அடங்கிய உள்ளவாறு பல காட்சிகள் இடம்பெற்று வருகிறது.
அதோடு புதிதாக பல நடிகர், நடிகைகளும் அறிமுகமாகி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சூப்பர் ஹிட் பெற்று வரும் சீரியல் பாவம் கணேசன். இந்த சீரியலின் கதாநாயகனை நாம் அனைவ ருக்கும் நன்றாகவே தெரியும் ஆனால் கதாநாயகியை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது.
கதாநாயகியின் உண்மையான பெயர் நஹாகவுடா ஆகும். இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் அந்தவகையில் கர்நாடகாவிலும் சில தொடர்களில் நடித்துள்ளார் இதன் மூலம் தான் இவருக்கு தமிழ் தொடர்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
அந்த வகையில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணப்பரிசு சீரியலின் மூலம் தான் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமாகியுள்ளார். இவர் அறிமுகமான முதல் சீரியல் இருக்கு சொல்லுமளவிற்கு பிரபலத்தை தரவில்லை. அதன்பிறகு சூப்பர் சேலஞ்ச் என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதன் மூலம் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவர் இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து கலக்கி வருகிறார். அதோடு மற்ற சீரியல்களை விடவும் பாவம் கணேசன் சீரியல் இவருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது சாரியில் க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.