முதன்முறையாக தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நீலிமா ராணி.! வைரலாகும் புகைப்படம்.

neelima rani 1

சின்னத்திரையில் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த இவர் சின்னத்திரையில் பிரபலமடைந்து வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை நீலிமா ராணி. சின்னத்திரையில் ரசிகர்களுக்கு இவர் நன்கு பிரசித்தமானவை என்றும் கூறலாம்.

இவர் தேவர் மகன் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமானார்.இதனை தொடர்ந்து பாண்டவர்பூமி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியம்,நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

வெள்ளித்திரையில் நடித்த பிரபலமடைந்த இவர் சின்னத்திரையில் மெட்டி ஒலி,கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட இன்னும் ஏராளமான சீரியல்களில் கதாநாயகியாகவும்,  வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மாறினார்.

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியின் அரண்மனைக்கிளி சீரியலில் நடித்து வந்த இவர் திடீரென்று சில பிரச்சினைகளினால் அந்த சீரியலில் இருந்து விலகினார் தற்பொழுது இவர் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதனை நிர்வகித்து வருகிறார்.

அந்த வகையில் தொடர்ந்து சில சீரியல்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் சினிமாவில் இந்த அளவிற்கு பிரபலமடைந்து இருந்தாலும் இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையை அனைவருக்கும் தெரியப்படுத்தவில்லை. இப்படிப்பட்ட நிலையில் நீலிமாராணி இவருடைய கணவர் இசைவாணனானுக்கும் 12 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.நீலிமா ராணி தான் முதலில் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

neelima rani
neelima rani

பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு அதிதி என்ற ஒரு மகள் இருக்கிறார்.  பிறகு இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த வந்த இவருக்கு ஜனவரி மாதம் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது இந்நிலையில் முதன்முறையாக தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.