புஷ்பா பட பாடலுக்கு மாமியாருடன் மரண குத்து குத்தும் நக்ஷத்ரா.! வைரலாகும் வீடியோ…

சின்னத்திரை தொலைக்காட்சியில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நக்ஷத்திரா இவர் அடிக்கடி சமூகவலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வெளியிடுவார்  அந்த வகையில் தற்போது புஷ்பா பட பாடலான ஏ சாமி பாடலுக்கு மரண குத்து குத்தும் வீடியோ ஒன்ரை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது மாமியார் பையனை கொடுத்துட்டு பையன் கையில் போன் கொடுத்துட்டு பாட்டு போட சொல்லி கூடவே ஆடும் மாமியார் என குறிப்பிட்டுள்ளார். நக்ஷத்திரா சென்னையில் பிறந்தவர் இவர் தன்னுடைய திரைப் பயணத்தை சின்னத்திரை மூலம் தொகுப்பாளினியாக தொடங்கினார்.

தன்னுடைய துருதுரு பேச்சால் ரசிகர்களை கட்டிப்போட்டவர். தொகுப்பாளராக பணியாற்றிய இவர் படிப்படியாக சின்னத்திரையிலும் படையெடுக்க ஆரம்பித்தார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வருகிறார். தன்னுடைய பள்ளிப் பருவத்தில் ராகவ்  என்பவருடன் நட்புடன் இருந்ததாக கூறப்படுகிறது.

அது நாளடைவில் காதலாக மலர்ந்தது அப்பொழுது இவர்கள் காதலிக்க ஆரம்பித்தார்களா இல்லையா என்று தெரியாதாம் ஆனால் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய காதலன் இவர்தான் என சோசியல் மீடியாவில் பகிர்ந்து பெற்றோர்கள் சம்மதத்துடன் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. நிச்சயதார்த்தத்துக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்தார்கள்.

நக்ஷத்ராவின் காதல் கணவர் ராகவ் மெடிஃபோகஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்தின் இயக்குனர் அதுமட்டுமில்லாமல் தியேட்டர்காரன் என்னும் தியேட்டர் நாடகக் குழுவின் இணை நிறுவனரும் ஆவார். கடந்த டிசம்பர் மாதம் நக்ஷத்ரா மற்றும் ராகவ் திருமணம் நடந்து முடிந்தது இந்த நிலையில் தங்களுடைய புத்தாண்டை தனது கணவருடன் பாண்டிச்சேரியில் கொண்டாடினார் அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலை நக்ஷத்ரா  புகைப்படம் மற்றும் தன்னுடைய மாமியாருடன் நடனமாடும் வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment