சின்னத்திரையில் ஏராளமான சீரியல்களில் ஹீரோயினாகவும், வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து இதன் மூலம் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்று சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை மகாலட்சுமி.இவர் விஜேவாக தன்னுடைய கெரியரை தொடங்கி தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் கதாநாயகியாக பிரபலமடைந்துள்ளார்.
மேலும் இவர் குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஏராளமான சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படிப்பட்ட நிலையில் இவர் தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு ஒரு குழந்தையும் பிறந்தது மேலும் இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த மகாலட்சுமி சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை திருமணம் செய்து கொண்டார் சில நாட்களுக்கு முன்பு மிகவும் கோலாகலமாக இவர்களுடைய திருமணம் நடைபெற்றது மேலும் தற்பொழுது இவர்களைப் பற்றி ரசிகர்கள் அனைவரும் மிகவும் விமர்சித்து வருவதால் அதற்கு பதில் அளிக்கும் வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்கள்.
அதாவது அவர்கள் கூறியதாவது ரசிகர்கள் கூறுவதைப் பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை அவர்களுக்காக நாங்கள் வாழவில்லை எங்களுக்கு பிடித்தார் போல் வாழ வேண்டும் என விரும்புகிறோம் என கூறி அனைத்திற்கும் முற்று புள்ளி வைத்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் எதைப் பற்றியும் கவலைப்படாத புது ஜோடி தற்பொழுது ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்கள்.
அதாவது இவர்கள் ஹனிமூன் சென்று உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் மகாலட்சுமி நயன்தாரா ரேஞ்சுக்கு மஞ்சள் தாலியை போட்டுக்கொண்டு மகாபலிபுரம் ரெஸ்டாரண்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் மகாலட்சுமி கூறியதாவது என்னுடைய இதயத்தை திருடி விட்டாய் அது உங்களிடமே இருக்கட்டும் லவ் யூ புருஷா என்று ரொமான்டிக்காக பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ரவீந்திரன் வாழ்க்கைக்கு அன்பு தேவை, அன்புக்கு மகாலட்சுமி தேவை லவ் யூ பொண்டாட்டி என கூறியுள்ளார்.இவ்வாறு இவர்கள் மாறி மாறி ட்வீட் போட்டுக் கொள்வது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது மேலும் ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.