2012-ல் புளி மூட்டை மாதிரி இருந்த கிருத்திகா சீரியல் நடிகை.! 2021ல் கிளி மாறி இருக்காங்களே.! ஏன்னா ஸ்ட்ரெச்சர் என வர்ணிக்கும் ரசிகர்கள்.!

kruthika
kruthika

சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் இருக்கும் நடிகைகளுக்கு ரசிகர் கூட்டம் ஏராளம் ஏனென்றால் சீரியலில் இருக்கும் நடிகைகளுக்கு இல்லத்தரசிகளும் ரசிகர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் சின்னத்திரையில் மிக எளிதாக வாய்ப்பு கிடைத்தாலும் கிடைத்த வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வது மிகவும் கடினம் என்று தான் கூற வேண்டும்.

அதேபோல் சின்னத்திரையில் தொலைக்காட்சி விட்டு தொலைக்காட்சி மாறிமாறி நடிப்பார்கள். அதிலும் திறமை இருந்தால் மட்டுமே முன்னேறி செல்ல முடியும் அந்தவகையில் பல வருடங்களாக தனது நடிப்பு திறமை மூலம் ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார் நடிகை கிருத்திகா. இவர் நடிப்பதற்கு மிகச் சிறு வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். கிட்டத்தட்ட பதினைந்து வயது இருக்கும் பொழுது இவர் நடிப்பில் அதிக ஆர்வம் காட்டி வந்தார்.

இந்த நிலையில் தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் பாண்டவர் இல்லம் என்ற மெகா ஹிட் சீரியலில் ரேவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பு பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது சினிமாவில் நடித்துள்ளார் ஆண்டவன் அடிமை, பேசாத கண்ணும் பேசும் ஆகிய படத்தில் நடித்திருந்தார் அதன்பிறகு சின்னத்திரையில் அதிக கவனம் செலுத்தினார்.

serial actress
serial actress

இவர் நடித்த முதல் சீரியல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த மெட்டி ஒலி தான் அந்த சீரியலில் அருந்ததி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அதன்பிறகு ஆனந்தம் ஆடுகிறான் கண்ணன் கணவருக்காக செல்லமே முந்தானைமுடிச்சு சின்னதம்பி என பல சீரியல்களில் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக நடித்து கொடுத்தார். சீரியல் மட்டுமில்லாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ரியாலிட்டி ஷோ காமெடி நிகழ்ச்சி டான்ஸ் என அனைத்திலும் பங்கேற்பார்.

பொதுவாக நடிகைகள் மற்றும் சீரியல் நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு குண்டாக மாறுவது வழக்கம் தான் ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும் திருமணத்திற்கு பிறகும் தனது உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்த நிலையில் நடிகை கிருத்திகா 86 கிலோவிலிருந்து 63 கிலோ வரை தனது உடல் எடையை குறைத்து பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தினார்.

இவர் சமீபத்தில் எப்படி உடல் எடையை குறைத்தேன் என வெயிட் லாஸ் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் இவர் தன்னுடைய உடல் எடையை குறைத்தால் சின்னத்திரையில் மீண்டும் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.

serial actress
serial actress