பல நடிகைகள் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் சமீப காலங்களாக சமூக வலைதளங்களின் சொந்தக்காரியாக மாறியவர் சின்னத்திரை நடிகை காவியா.
விஜய் டிவியில் தற்பொழுது பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்.
இந்த சீரியல் குடும்ப கதையை மையமாக வைத்து இயக்கப்பட்டதால் இல்லதரசிகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நாடகமாக இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்நாடகத்தில் காதலுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருவதால் இளசுகளின் மத்தியிலும் பிரபலமடைந்துள்ளது.
இந்த சீரியலில் கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரம் தான் மிகவும் பேமஸ்சாக இருந்து வருகிறது. இவர்களின் ஒன் ஸ்டீல் லவ் ஒட்டுமொத்த ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வகையில் கதிர் கேரக்டரில் டான்ஸ் மாஸ்டர் மற்றும் நடிகருமான குமரனும்,முல்லை கதாபாத்திரத்தில் Vj சித்ராவும் நடித்து வந்தார்கள்.
Vj சித்ரா மறைந்ததற்கு பிறகு தற்பொழுது பாரதிகண்ணம்மா சீரியல் அறிவு என்ற கேரக்டரில் நடித்து வந்த காவியா நடித்து வருகிறார். சித்ரா போலவே இவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் இவரும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது கெவுன்அணிந்து கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா போல் இருக்கிரீங்க என்று கமெண்டு செய்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.