குஷி பட ஜோதிகாவை போல் இடையைக் காட்டி இளசுகளை அலறவிட்ட பாண்டியன் ஸ்டோர் புதிய முல்லை.!

kaviya

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் டிஆர்பி-யில் தொடர்ந்து முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியல் 4 அண்ணன் தம்பிகளின் பாச உறவுகளையும், கூட்டு குடும்பத்தையும் மையமாக வைத்து இயக்கப்படுவதால்  இல்லதரசிகள் மற்றும் முதியவர்களுக்கு பிடித்த நாடகமாக விளங்குகிறது.

இதனைத் தொடர்ந்து இந்த சீரியலில் முல்லை மற்றும் கதிர் இவர்களின் ஒன்ஸ் கிரீன் லவ் இளசுகளை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்தவகையில் இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு கேரக்டரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது.

இந்நிலையில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்திரா இந்த சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர். எதிர்பாராதவிதமாக திடீரென்று இவர் இறந்ததால் இவருக்கு பதிலாக பாரதிகண்ணம்மா சீரியலில் அறிவு கேரக்டரில் நடித்து வந்த காவியா தற்போது சித்ராவிற்கு பதிலாக முல்லை கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் காவியாவும் தொடர்ந்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் தற்போது பிரபலம் அடைந்துள்ளார். இதன் மூலம் இவருக்கு வெள்ளித்திரையிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தவகையில் வாணிபோஜன் நடிக்க உள்ள ஒரு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக கமிட்டாகியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க இவரும் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.  இந்நிலையில் இவர் சில காலங்களாக தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் அனைத்து புகைப்படங்களும் கவர்ச்சி தூக்கலாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சை எழுந்துள்ளது.

அந்த வகையில் தற்போது இவர் கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் புடவையில் ஒட்டு மொத்த அழகும் தெரியும் அளவிற்கு கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்.