பால் கொழுக்கட்டை மாதிரி முகம் பளபளன்னு இருக்க சீரியல் நடிகை கண்மணி என்ன செய்கிறார் தெரியுமா.!

kanmani manoharan

serial actress kanmani beauty tips : என்னதான் மாடலிங் துறையில் இருந்தாலும் பல விளம்பரங்களில் நடித்தாலும் பெரிதாக மக்கள் மத்தியில் ரீச் ஆக முடியாது. ஆனால் ஏதாவது ஒரு சீரியலில் டாப் ரோலில் நடித்து விட்டால் போதும் ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்து விடலாம். அந்த அளவு இல்லத்தரசிகள் பொழுதுபோக்காக சீரியல் பார்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை கண்மணி விஜய் தொலைக்காட்சியில் பாரதிகண்ணம்மா என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார் ஆனால் இந்த தொடரில் இருந்து இவர் பாதியிலேயே வெளியேறிவிட்டார் ஆனாலும் தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்பொழுது தன்னுடைய முகம் அழகாக இருக்க காரணம் நான் இதைதான் ஃபாலோ பண்ணுகிறேன் என ஒரு சில குறிப்புகளை அவர் கொடுத்துள்ளார்.

அந்த வகையில் முகத்திற்கு முல்தானி மெட்டி, அரிசி மாவு, சந்தனம் பப்பாளி என முழுக்க முழுக்க இயற்கை சாதன பொருட்களை மட்டுமே தான் பயன்படுத்துவதாகவும், காலை எழுந்தவுடன் முதல் முதலில் பேஸ்வாஸ் செய்துவிட்டு முகத்தில்  வைட்டமின் சி கிரீமை முகத்தில் அப்ளை செய்வேன் என கூறியுள்ளார்.

அதேபோல் வாரத்திற்கு ஒரு முறையாவது பாதாம் எண்ணெய் அல்லது விளக்கெண்ணையை முகத்தில் ஊற்றி மசாஜ் செய்து விடுவேன் அது மட்டும் இல்லாமல்  ஜூஸ் குடிப்பது கண்மணிக்கு டெய்லி ரோட்டின் வேலையாம் இப்படி தான் சீரியல் நடிகை கண்மணி முகத்தை பொலிவாக வைத்துள்ளார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.kanmani manoharan