சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்பது பாய்மரக்கப்பல் நம்பி நடுக்கடல் வரை செல்வதாகும். ஏனென்றால் சினிமா துறையில் அறிமுகமாகும் அனைவரும் மிகப்பெரிய அளவில் வளர்வதில்லை அதிர்ஷ்டவசமாக ஒரு சிலர் மட்டுமே பெரிய அளவில் வளர்ச்சி அடைகின்றனர். ஒரு படம் நன்றாக மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றால் அந்த படத்தில் நடித்த நடிகன் மற்றும் நடிகைகளின் மார்க்கெட் உயரும், இதுவே படம் பிளாப் என்றாள் அவர்களின் மார்க்கெட் அப்படியே கீழே சென்று விடும், இதுதான் சினிமா.
இப்படி எல்லாம் இருக்க விஜய் தொலைக்காட்சியால் அறிமுகமாகும் பல நபர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களாக இல்லையென்றாலும், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்களாக வலம் வருகிறார்கள். விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமாகி பொருளாதாரத்திலும் உயர்ந்தவர்கள் பலர்.
கார் வாங்குவது என்பது இங்கு உள்ள பல மக்களின் கனவு, அது அவ்வளவு எளிதாக நிறைவேற்றப்படவில்லை,அதற்காக வெகுகாலம் உழைக்க வேண்டியதாக உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான புகழ் என்பவர் கார் வாங்கியது நம் அனைவருக்கும் தெரியும் அவரது இந்த வளர்ச்சி விஜய் தொலைக்காட்சியால் தான் என்று கூறினால் அது மிகையாகாது, அதைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமான பல நபர்கள் கார் வாங்கியது நம் அனைவருக்கும் தெரியும்.
தற்பொழுது பிக்பாஸ் பிரபலமான கேப்ரில்லா தற்பொழுது ஒரு புது காரை வாங்கியுள்ளார், அந்தப் புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறியது “பல மாதங்கள் யோசித்து இந்த முடிவை நான் எடுத்து உள்ளேன், டாடா ஹாரியர் டார்க் எடிஷன் காரை வாங்கியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியுள்ளார். இந்த காரின் விலை சுமார் 20 லட்சம் ஆகும். புதிய கார் வாங்கியது அடுத்து பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.