பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்பொழுதெல்லாம் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கிறது.
அந்த வகையில் தற்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் நடிகை காயத்ரி யுவராஜ். இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து அரண்மனைக்கிளி உள்ளிட்ட இன்னும் சில சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் இந்நிலையில் தற்போது இவர் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடித்து வருகிறார்.
விஜய் டிவியை தொடர்ந்து சன் டிவிக்கும் அறிமுகமாகியுள்ளார். அந்த வகையில் சன் டிவியில் சித்தி 2 மற்றும் புதிய சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். பொதுவாக நடிகைளை விடவும் பல வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து உள்ளார்கள்.
இந்நிலையில் தற்போது காயத்ரி யுவராஜ் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.அந்த வகையில் தற்பொழுது கருப்பு நிற பெரிய கவுனில் தேவதை போல் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.