பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் பேவரட் சீரியல்கள் ஆகும். அப்படி விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா தொடர் மக்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அமோகமாக ஒளிபரப்பாகி வருகின்றன.
இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்கும் இடையே சில பிரச்சனைகளின் காரணமாக கடந்த 9 ஆண்டு காலமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் தற்போது இவர்களது குழந்தைக்காக இருவரும் பேச வேண்டிய சூழல் வந்துள்ளது.
மேலும் கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் லக்ஷ்மி என்கின்ற குழந்தை கண்ணம்மாவிடவும் ஹேமா என்கின்ற குழந்தை பாரதி இடமும் தனித்தனியாக வளர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் சேர்ந்து தனது அப்பா அம்மாவை சேர்த்து வைக்க நினைக்கின்றனர்.
ஆனால் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரை சேரவிடாமல் பல தடைகளைக் கொண்டு வருவது இந்த சீரியலில் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா. இவர் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருவதற்காக இந்த சமூகத்தில் பல நெகட்டிவ் கமெண்ட்களையும் சமாளித்து வருகிறார். மேலும் பரினாவிற்கு அண்மையில்தான் ஒரு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
குழந்தை பிறந்ததை அடுத்தும் இந்த சீரியலில் தொடர்ந்து பரினா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் அவரது சோசியல் மீடியா பக்கத்தில் அவரது குழந்தையுடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை பெற்று வருகின்றன.