பொதுவாக சின்னத்திரை நடிகையாக இருந்தாலும் வெள்ளித்திரை நடிகையாக இருந்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருப்பது வழக்கமாக இருந்து வருகிறது. சினிமா என்றாலே நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து தான் ஆக வேண்டாம் அப்படி செய்தால் மட்டுமே சினிமாவில் பிரபலமடைய முடியும் என்ற ஒரு சூழ்நிலைகள் இருந்து வரும் நிலையில் தற்போது பிரபல சின்னத்திரை நடிகை தனது அட்ஜஸ்மெண்ட் கேட்டு டார்ச்சர் செய்ததாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது சின்னத்திரையில் நீண்ட காலங்களாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் தேவி பிரியா. சீரியல்களில் நடித்த வரும் தேவி பிரியா அதே போல் சினிமாவிலும் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றி வருகிறார் அப்படி சீமராஜா படத்தில் சிம்ரனுக்கும், புதுக்கோட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து உள்ளார். பொதுவாக வில்லி கேரக்டரில் நடித்துவரும் இவர் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணே கலைமானே சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
இவருடைய எதார்த்தமான நடிப்புக்கு மக்கள் மத்தியில் எப்பொழுதும் பாராட்டுவது உண்டு இந்நிலையில் சமீப பேட்டி ஒன்றில் பங்கு பெற்ற தேவி பிரியா தனது வாழ்க்கையில் நடந்த மோசமான தகவல்களை குறித்து பேசி உள்ளார்.
அதில் தேவி பிரியா பெங்களூரில் இருந்து ஒரு அழைப்பு வந்ததாகவும் அதில் ஒரு நபர் தன்னிடம் ஆங்கிலத்தில் நன்றாக பேசி வந்த நிலையில் பெங்களூரில் நடைபெற்ற வரும் நிகழ்ச்சி ஒன்றுக்கு வர முடியுமா என்று கேட்டதாகவும் அதற்கு நிகழ்ச்சி நடக்கும் நாள் அன்று வருகிறேன் என்று தேவி பிரியா கூறியதாகவும் நிகழ்ச்சி முடிந்தவுடன் நான் சென்று விடுவேன் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் அந்த நபர் மீண்டும் டார்ச்சர் செய்து தன்னிடம் விருந்தில் பங்கேற்க வேண்டும் என கூறியதாகவும் அதற்கு தேவி பிரியா எல்லாம் என்னால் முடியாது என்று மறுத்துவிட்டதாகவும் கடைசியில் அவர்கள் எந்த நோக்கத்தின் அடிப்படையில் தன்னை அழைத்திருக்கிறார்கள் என்று புரிந்துக் கொண்டதால் அந்த அழைப்பை துண்டித்து விட்டதாகவும் பேட்டியில் தெரிவித்துள்ளார்.