பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்.
இந்த சீரியல் 4 அண்ணன் தம்பிகளின் பாச உறவுகளையும் கூட்டு குடும்பத்தையும் மையமாக வைத்து ஒளிபரப்பி வருவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நாடகமாக விளங்குகிறது.
அதேபோல் இந்நாடகத்தில் காதலுக்கும் பஞ்சமில்லை கதிர் மற்றும் முல்லையின் ஒன் ஸ்கிரீன் லவ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், வெங்கட், காவியா உள்ளிட்ட இன்னும் பல நட்சத்திர பட்டாளங்கள் ஒன்றிணைந்து நடித்து வருகிறார்கள்.
தற்பொழுது இந்த சீரியலில் ஃபிளாஷ்பேக் கதைகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் மூர்த்தி, ஜீவா, கதிர்,முல்லை, கண்ணன் ஆகிய கேரக்டரில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு பதிலாக குட்டி குழந்தைகள் அறிமுகமாகி வந்துள்ளார்கள்.
அந்த வகையில் தற்பொழுது மூர்த்தி மற்றும் தனம் இருவர்களின் திருமணம் எப்படி நடந்தது என்பதை வைத்து எபிசோட் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்பொழுது லக் டவுன் காரணத்தினால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் தீபிகா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது என மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தீபிகா தனது சொந்த ஊரான திருநெல்வேலியில் பொழுதை கழித்து வருகிறார். அங்கு தனது சொந்த ஊரில் பசுமாட்டை கழுவும் வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லாக் டவுனால் உங்கள் நிலைமை இப்படி ஆயிடுச்சே என கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.