விஜயின் ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ்.! வைரலாகும் வீடியோ…

shruthi-raj
shruthi-raj

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் நடிகர் விஜய் அவர்கள் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. இந்தத் திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி அவர்கள் இயங்கி உள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது..

இதனை தொடர்ந்து பொங்கலில் ரிலீஸ் ஆக உள்ள வாரிசு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர் மத்தில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் அதனை தொடர்ந்து அண்மையில் வெளியான வாரிசு திரைப்படத்தில் இடம்பெற்று இருந்த ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்தப் பாடலுக்கு சினிமா பிரபலங்கள் பலர் விஜயை போல நடனம் ஆடி அதை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் பிரபல சீரியல் நடிகையும் இந்த பாடலுக்கு விஜய் எப்படி ஆடினாரோ அதேபோல ஆடி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றுதான் சன் டிவி தொலைக்காட்சி இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு முக்கிய தொடரான தாலாட்டு என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சுருதி. இவர் தாலாட்டு சீரியலுக்கு முன்பாகவே சன் தொலைக்காட்சியில் துளசி என்ற தொடரில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் அழகு என்ற சீரியலிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி சீரியல்களில் பிஸியாக இருந்து வரும் நடிகை சுருதி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் நடித்து வெளியாக உள்ள வாரிசு திரைப்படத்தில் இடம் பெற்ற ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலுக்கு நடிகை ஸ்ருதியும் நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ.