சின்னத்திரை சித்ரா விஜய் தொலைக்காட்சியில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் இவர் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பொழுது பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார் அந்த நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் சித்ரா தற்கொலையில் அவருடைய கணவர் ஹேமந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் சித்ரா அந்த ஹோட்டலில் கடந்த 9ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார், அவர் தூக்கிட்டு தான் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறினார்கள் அவர்களைத் தொடர்ந்து ஆர்டிஓ அதிகாரி திவ்யஸ்ரீ விசாரித்தார்.
இந்த நிலையில் ஏற்கனவே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்துள்ளார்கள்,அப்படியே இருக்கும் வகையில் ஒரு புதிய தகவல் தற்போது சித்ரா வழக்கில் கிடைத்துள்ளது அதன்படி சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பின்னர் ஹேமந்த் ஹோட்டல் ஊழியர் கணேஷும் போலீசாருக்கு தகவல் கொடுக்காமல் சடலத்தை அவர்களைக் கீழே இறங்கி உள்ளார்கள்.
அதனால் சித்ராவின் தற்கொலையை இன்னும் போலீசார் சந்தேகங்களும் பார்க்கிறார்கள், அதுமட்டுமில்லாமல் சித்ராவின் கணவர் ஹேமந்த் சித்ரா தற்கொலை செய்து கொண்ட பொது தான் வெளியே சென்றதாக கூறியுள்ளார். அந்த சமயத்தில் வேறு யாராவது அறைக்குச் சென்று அவரை கொலை செய்துவிட்டு ஓட்டல் அறையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி மூடும் வசதியைப் பயன்படுத்தி கதவை மூடிவிட்டு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
அதன்படி சித்ராவின் மரணத்தில் மூன்றாவது நபருக்கு தொடர்பு இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக போலீசார் கூறியுள்ளார்கள், அந்த மூன்றாவது நபர் அவருக்கு பழக்கமுள்ள பிரபலமான அரசியல் புள்ளிகளில் ஒருவராக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.