குழந்தை பெற்று சில வாரங்களே ஆன நிலையில் “ஊ சொல்றியா மாமா” பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார் சீரியல் நடிகை பரினா.!

samanatha-and-farina
samanatha-and-farina

சின்னத்திரை சீரியல்களில் டிஆர்பியில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் சீரியலில் ஒன்று பாரதி கண்ணம்மா தொடர். இந்த சீரியலின் மூலம் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பிரபலம் அடைந்தவர் நடிகை பரினா. மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற விஜய் டெலி அவார்ட் போன்ற நிகழ்ச்சிகளில் சிறந்த வில்லியாக விருதும் வாங்கியுள்ளார்.

பாரதி கண்ணம்மா தொடர்களில் முக்கிய பில்லர் ஆக நடித்து வந்த இவர் நிஜத்தில் கர்ப்பமாக இருந்த போதிலும் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். ஆனால் இவரது பிரசவ கால கட்டங்களில் மட்டும் பாரதி கண்ணம்மா தொடரிலிருந்து இவரை நீக்காமல் இவரது கதாபாத்திரத்துக்காக காட்சிகளை மட்டும்  காண்பிக்காமல் சீரியலை திசைதிருப்பி பாரதி மற்றும் கண்ணம்மா இருவரையுமே பெரிதும் காண்பித்து வருகின்றனர்.

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தான் இவருக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. மேலும் அந்த குழந்தையின் புகைப்படத்தை கூட பரினா சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் குழந்தை அழகாக உள்ளது என வாழ்த்துகளைத் தெரிவித்து  வந்தனர்.’

தற்போது இவர் மீண்டும் பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.  இதனை அடுத்து இவர் குழந்தை பெற்ற பின் முதல் நிகழ்ச்சியாக நேற்று கிறிஸ்துமஸை முன்னிட்டு விஜய் டிவியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அண்மையில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் திரையரங்கில்  நல்ல வசூல் வேட்டையை ஈட்டி வருகிறது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள  “ஓ  சொல்றியா மாமா” என்ற பாடல் ரசிகர்களிடையே ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தற்போது பரினா இந்த பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு உள்ள வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ.