நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்திய ஆலியா மானசா..!! வைரலாகும் புகைப்படம்.

aliya manasa

தற்பொழுது சினிமாவில் உள்ள சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சீரியல் ராஜா ராணி. இந்த சீரியலின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தனது எதார்த்த நடிப்பு திறமையிளும் அழகினாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்து போட்டவர் ஆலியா மானசா.

இந்த சீரியலில் செம்பா என்ற கேரக்டரில் நடித்து வந்த இவருக்கு ஜோடியாக கார்த்திக் என்ற கேரக்டரில் சஞ்சீவ் நடித்து வந்தார். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்ததால் இருவரும் காதலித்து 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

ஆலியா மானசா வீட்டில் திருமணத்திற்கு பெரிதாக ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் சிம்பிளாக கல்யாணத்தை செய்து கொண்டார்கள். அதன்பிறகு சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் மிகவும் ஆடம்பரமாக வரவேற்ப்பு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இவர்களுக்கு கடந்த வருடம்  அழகிய பெண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு ஐலா சையத் என பெயர் வைத்துள்ளார்கள்.  இந்த குழந்தையின் முதல் பிறந்த நாளைக் கூட மிகவும் ஆடம்பரமாக நடத்தி வீடியோக்கள், புகைப்படங்கள் என்று பலவற்றையும் யூடியூப் சேனலில், இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். பொதுவாக பலர் குழந்தை பிறந்ததும் மிகவும் குண்டாக இருப்பார்கள் ஆனால் தனது கடின உடற்பயிற்சியை ஆலியா மானசா தனது உடல் எடையை குறைத்தார்.

இந்நிலையில் தற்போது இவர் ராஜா ராணி சீசன் 2வில் சித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் ஸ்லீவ்லெஸ் உடையில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆலியா மானசாவின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.