லாக்டவுணிலும் பிறந்தநாள் கொண்டாடிய ஆலியா மானசா.! அட இப்படி ஆயிடுச்சு

aliya manasa 1
aliya manasa 1

வெள்ளித்திரை பிரபலங்களை விட சின்னத்திரை பிரபலங்கள் ரசிகர்கள் மத்தியில் எளிதில் பிரபலமடைந்து விடுகிறார்கள் ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடமும் கிடைத்துவிடுகிறது. ஆனால் வெள்ளித் திரை பிரபலங்கள் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுமானால் குறைந்தது ஐந்து திரைப்படங்களில் நடித்தால் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கு என்று ஒரு மவுசு இருக்கும்.

ஆனால் சின்னத்திரை பிரபலங்களுக்கு அப்படி கிடையாது அவர்கள் நடிக்கும் முதல் சீரியலின் மூலமே ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து விடுவார்கள். அதுவும் ஒரு சில சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் கெமிஸ்ட்ரி மிகவும் அற்புதமாக அமைந்தால் போதும் ரசிகர்களின் பேவரைட் நடிகர் நடிகைகளாக மாறிவிடுவார்கள்.

அந்தவகையில் சின்னத்திரை சீரியலில் நடிகர் நடிகைகளாக நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டவர்களும் பலர் உள்ளார்கள்.  அந்த வகையில் ஒரு சீரியலில் இருவரும் இணைந்து நடித்து அதன் பிறகு காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டவர்கள் தான் சஞ்சீவ் ஆலியா மானசா.

இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் புதிதாக அறிமுகமானார்கள். அதன் பிறகு இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இருவருக்குமிடையே நட்பு ஏற்பட்டுள்ளது அந்த நட்பு போகப்போக காதலாக மாறியதால் திருமணம் செய்து கொண்டார்கள்.

சமீபத்தில் தான் இவர்கள் தனது குழந்தையின் முதல் பிறந்த நாளை கொண்டாடினார்கள். அந்த குழந்தைக்கு ஐலா என பெயர் வைத்துள்ளார்.  இந்நிலையில் இன்று ஆலியா மானசாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே சின்னத்திரை பிரபலங்கள்,ரசிகர்கள் என்று அனைவரும் ஆலியா மானசாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். பொதுவாக ஆலியா மானசா பிறந்தநாளை சஞ்சீவ் கோலாகலமாக கொண்டாடுவார். ஆனால் தற்பொழுது லாக் டவுன் என்பதால் வீட்டிலேயே சிம்பிளாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள்.

அந்தவகையில் சஞ்சய் பாப்புவின் இந்த முறை பிறந்தநாள் லாக் டவுனில் மாற்றிக்கொண்டது கொஞ்சம் வருத்தமாகத்தான் உள்ளது எனக்கூறி கேக்கை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.

cake
cake