தமிழ் சின்னத்திரை ஜோடிகளில் முக்கிய ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ். இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியல் மூலம் ரீல் ஜோடிகளாக சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டதால் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்கள் இருவரும் வேறு வேறு மதம் என்பதனால் ஆலியா மானசாவின் குடும்பத்தினர்கள் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள வில்லை எனவே சஞ்சீவ் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக ஆலியா மானசாவை திருமணம் செய்து கொண்டார்.
ஒரு காலகட்டத்தில் இவர்கள் யார் என்று பலருக்கு தெரியாது ஆனால் தற்போதெல்லாம் இவர்களை தெரியாதவர்கள் யாரும் கிடையாது என்றுதான் கூறவேண்டும். ராஜா ராணி முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ஆலியா மானசா நடித்த வந்தார் பிறகு இவருக்கு இரண்டாவது முறையாக ஆண் குழந்தை பிறந்ததால் சீரியலில் இருந்து சமீபத்தில் விலகினார்.
பிறகு சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கயல் சீரியலில் நடித்து வருகிறார். இவ்வாறு திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு ஐயா என்ற பெண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது கடந்த மார்ச் 27-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலானது.
எனவே தற்போது உள்ள ஏராளமான சின்னத்திரை நடிகர்-நடிகைகள் யூடியூப் சேனல் ஆரம்பித்துள்ளார். அதேபோல் இவர்கள் இருவரும் இணைந்து ஐலா பாப்பா செய்யும் அட்டகாசங்கள் மற்றும் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு யூடிபில் லைக்குகளையும், சப்ஸ்ரைபர்களையும் அதிகமாகிவுள்ளதால் அவர்களுக்கு கோல்டு ஷீட் பரிசாக கிடைத்துள்ளது.
இவ்வாறு இவர்களின் மகன் பிறந்த ராசியால் இவர்களுக்கு இந்த சீட் கிடைத்து இருப்பது பெரும் மகிழ்ச்சி என்று கூறி அதனை ரசிகர்களிடம் காட்டி நன்றிகளைக் கூறிவுள்ளார்கள்.அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.