Serial actress Shivani putta bomma dance video:சிவானி நாராயணன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு எனும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பிறகு அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் என்னும் சீரியலில் அவர் நடித்து வந்தார். ஓரிரு மாதங்களில் அதிலிருந்து விலகி பின்பு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்னும் சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்துவருகிறார்.
வெள்ளி திரையில் எப்படி நடிகர் நடிகைகளுக்கு ரசிகர் பட்டாளம் உள்ளதோ அதுபோல சின்னத்திரையில் நடிக்கும் சிவானி நாராயணன்க்கு என ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இவர் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே இருந்துகொண்டு போரடிக்காமல் இருப்பதற்காக அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்கள் என சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இவர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி வீடியோவை பதிவிட்டிருந்தார்.பின்னர் தங்க மகன் படத்தில் இருந்து பாடல் பாடி பதிவிட்டிருந்தார். பின்னர் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த வகையில் தற்போது புட்ட பொம்மா பாடலுக்கு ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ.
#shivani #Serialactress pic.twitter.com/OEXx01JGRx
— Tamil360Newz (@tamil360newz) April 16, 2020