விஜயுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட செம்பருத்தி சீரியல் நடிகை.! யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போடும்..

vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் அண்மை காலமாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய வசூல் வேட்டையாடுகிறது. இதனால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.  தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி உள்ளார்

தில் ராஜு மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து இருக்கிறார். வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகி உள்ளதாம் விஜய் இதில் மிகப்பெரிய பணக்காரராக நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ் மெயின் வில்லனாக நடித்துள்ளதாக தெரிய வருகிறது

இந்த படத்தில் இவர்களுடன் இணைந்து சரத்குமார், பிரபு, ஜெயசுதா என மிகப் பெரிய ஒரு திரை பட்டாளமே நடித்திருக்கிறது படம் அடுத்த வருடம் பொங்கலை குறி வைத்து ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்கு முன்பாகவே ரசிகர்களை கவர்ந்து இழுக்க அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது கடைசியாக வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

அதில் படத்தில் நடித்த பல நடிகர்கள் மற்றும் திரையுலகில் இருக்கும் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். விழா முடிந்த பிறகு பலரும் விஜயுடனும் மற்றவர்களுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த வகையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா விஜயை சந்தித்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார்

அது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வேற லெவலில் இருக்கிறது என கூறி லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி அசத்தி வருகின்றனர். இதோ சீரியல் நடிகை ஷபானா தளபதி விஜய் உடன் எடுத்துக்கொண்ட அந்த லேட்டஸ்ட் புகைப்படம்..

vijay-shabana
vijay-shabana