ஒரு சில சீரியல்கள் ஒளிபரப்பாகி முடிந்து பல வருடங்கள் ஆனாலும் அந்த சீரியலை மட்டும் மறக்கவே முடியாது அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பாகி வந்த சீரியல்தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகர் செந்தில்.
சரவணன் மீனாட்சி சீரியலில் செந்தில் மற்றும் கதாநாயகியின் கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலம் அடைந்தது. எனவே இந்த சீரியல் இருக்கு பேராதரவு கிடைத்ததால் தொடர்ந்து 3 சீசன்கள் ஒளிபரப்பானது.
இந்த சீரியலுக்கும் பிறகும் தொடர்ந்து செந்தில் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த சீரியலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் ஒரு நாள் இவர் நடிக்கவில்லை என்றாலும் இவரின் ரசிகர்கள் வருத்தப்படுவார்கள் அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது.
அதோடு இவரின் சிறந்த நடிப்பு திறமையினால் தற்போது வரையிலும் இவர் சின்னத்திரையில் 15 வருடங்களாக பணியாற்றி வருகிறார். இவர் மிஸ்ஸி வானொலியில் பணியாற்றி இருந்தார் என்பதை நாம் அறிந்த ஒன்று தான்.
அந்த வகையில் செந்தில் விஜயுடன் பல வருடங்களுக்கு முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செந்திலா இது அடையாளமே தெரியல எனக் கூறி வருகிறார்கள்.