8 வருடத்திற்கு பிறகு பிறந்த தன்னுடைய ஆசை குழந்தையின் புகைப்படத்தை முதன் முதலாக வெளியிட்ட மிர்ச்சி செந்தில்.! வாழ்த்தும் ரசிகர்கள்

mirchi-senthil

சின்னத்திரையில் இணைந்து நடித்த ஏராளமான பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் சின்னத்திரையின் பிரபல ஜோடிகளாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா. சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர்களை ஏராளமான ரசிகர்கள் பின்பற்றி வருகின்றனர்.

இவர்கள் சரவணன் மீனாட்சி சீரியல் இணைந்து நடித்து பிரபலமானவர்கள். மிர்ச்சி சிவா தொகுப்பாளராக பணியாற்றி வந்த நிலையில் அதன் பிறகு சரவணன் மீனாட்சி சீரியல் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது தற்போது வரையிலும் தொடர்ந்து ஏராளமான சீரியல் நடித்து வருகிறார்.

இவ்வாறு சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் வருகிற ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் கடைசியாக இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வந்த நிலையில் இதனை அடுத்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா என்ற புதிய சீரியலில் ஹீரோவாக நடித்த வருகிறார்.

இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்பொழுது செந்தில் மற்றும் அவரது மனைவி ஸ்ரீஜா இருவரும் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை மிர்ச்சி செந்தில் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். திருமணமாகி 8 வருடங்கள் கழித்து ஸ்ரீஜா கர்ப்பமான நிலையில் கடந்த ஜனவரி 4ம் தேதி அன்று இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

அந்த வகையில் தற்பொழுது மகன் பிறந்த ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில் எனது மகனுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையதளத்தில் மிர்ச்சி செந்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக அனைவரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

mirchi senthil
mirchi senthil