தன்னை எந்த படத்துலையும் நடிக்கவிடாததன் காரணமாக பிரபல சீரியல் நடிகர் எடுத்த அதிரடி முடிவு..!

serial-actor

தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு தொடர்கள் பல இல்லத்தரசிகளிடம் நல்ல வரவேற்பையும் நல்ல மதிப்பையும்  பெற்றுக் கொண்டு வருகிறது.  அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவு பெற்ற சீரியல் என்னவென்றால் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் சொல்லலாம்.

இந்த தொடரானது கடந்த 2017ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. மேலும் இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் தான் கார்த்திக், அதேபோல பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ஷபானா. இவருக்கு ஜோடியாக நடிகர் கார்த்திக் நடித்திருப்பார். இவர் இதற்கு முன்னதாகவே விஜய் தொலைக்காட்சியில் ஆபிஸ் தொடரில்  கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றவர்.

சீரியல் நடிகர் கார்த்திக் அவர்கள் செம்பருத்தி சீரியளை தொடர்ந்து பல  தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. அந்த வகையில் இவர் முகிலன் என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்திருந்தார்.  அதில் இவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா பாண்டியன் நடித்திருப்பார்.

ஆனால் இந்த வெப்சீரிஸ் தொடரானது சொல்லுமளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. அந்தவகையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் கார்த்திக். அந்த வீடியோவில் அவர் என்னை எந்த ஒரு தொடரிலும் சரி படத்திலும் வேலைகளை செய்ய விடமாட்டீங்குறாங்க.

இதனால் மன வேதனையில் இருக்கும் நான் தானே சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்ததாகவும் அதில் தானே நடிக்க இருக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.  அதற்காக உங்களால் முடிந்த உதவிகளை எனக்கு செய்யுமாறு  தனது  வங்கி விவரங்களை தெளிவாக வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

இதனை அறிந்த பல ரசிகர்கள் உங்களுடைய அப்பா ஒரு தயாரிப்பாளர்தான். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். இருந்தாலும் ஏன் மக்களிடையே உதவி கேட்கிறீர்கள்? என்று பலரும் தங்களுடைய கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ.