சீரியலில் இரண்டு பெண்களுடன் சேர்ந்து வாழ்க்கையை என்ஜாய் பண்ணும் கோபியின் நிஜ மனைவியை பார்த்தது உண்டா.? இதோ புகைப்படம்.

pakkiya laxmi

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தமிழ்நாட்டில் உள்ள பல குடும்பங்களும் ரசித்து பார்க்கும் சீரியலாக இருந்து வருவது பாக்யலட்சுமி தொடர். இதில் ஒரு இல்லத்தரசி பெண் தனது குடும்பத்தை எவ்வளவு அழகாக பொறுமையாக எடுத்து நடத்துகிறார் என்பதை வைத்துதான் ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் சமீபத்தில் விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் பாக்கியலட்சுமி தொடரில் பலரும் விருது வாங்கினர். அப்படி சிறந்த கதாநாயகி கதாபாத்திரத்தில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜித்ரா தான் அந்த விருதை தட்டிச் சென்றார்.

இந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் மெகா சங்கமம் நடைபெற்று வருகிறது அதில் பாண்டியன் ஸ்டோர் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் ஒன்றாக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. பாக்கியலட்சுமியின் மாமனார் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக பாண்டியன் ஸ்டோர் குடும்பமும் இவர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர்.

இப்படி இரு குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில் பாக்யாவின் கணவர் கோபி மட்டும் சற்று எரிச்சலடைய செய்கிறார்கள். கோபி இந்த சீரியலின் அவரது காதலி ராதிகாவை காதலித்து வருகிறார் திருமணமும் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். இப்படி இந்த சீரியலில் திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பிறகு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் கோபியை ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் அவரது நிஜ மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்திற்கு ஒரு பக்கம் லைக்குகளை தெரிவித்து வந்தாலும் மறுபக்கம் கோபி கதாபாத்திரத்தின் மேல் இருக்கும் கோபத்தையும் கமெண்டுகளில்  திட்டி தீர்த்து வருகின்றனர்.

gobi and wife
gobi and wife