ஈரமான ரோஜாவே திரவியத்திற்க்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்.

dhiraviyam
dhiraviyam

பொதுவாக வெள்ளித்திரையில் ஒரு நடிகர், நடிகை பிரபலமடைய வேண்டும் என்றார் அவர் குறைந்தது ஐந்து திரைப்படங்களில் நடித்து இருந்தால் மட்டுமே அவர்களால் ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்க முடிகின்றது ஆனால் சின்னத்திரையில் அப்படி இல்லை அறிமுகமான முதல் சீரியலிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த விடுகிறார்கள்.

மக்கள் நாள்தோறும் அந்த நடிகர் நடிகைகளை பார்ப்பதனால் என்னவோ இவர்களை எளிதில் ஏற்றுக் கொள்கிறார்கள். அந்த வகையில் அவர்கள் நடித்து வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி சீரியலுக்கென்றே பெயர் போன ஒரு தொலைக்காட்சி தான் விஜய் டிவி.

விஜய் டிவியின் மூலம் அறிமுகமான ஏராளமான நடிகர் நடிகைகள் தற்பொழுது வெள்ளித்திரையில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தொடர்ந்து சின்னத்திரையில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருபவர்தான் நடிகர் திரவியம்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் முதல் சீசனில் நடித்திருந்தார். இந்த சீரியல் அமோக வரவேற்பை பெற்றதால் இரண்டாவது சீசனையும்  ஒளிப்பரப்பி வருகிறார்கள். ஈரமான ரோஜாவே 2 சீரியலில் அனைத்து கேரக்டர்களும் மாற்றப்பட்டு புதிய நடிகர் நடிகைகள் அறிமுகமாகியுள்ளார் ஆனால் திரவியத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அவரை மற்றும் மாற்றாமல் அப்படியே வைத்துள்ளார்கள்.

இந்த சீரியல் முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  பார்திக்கு நிச்சயமாகி இருந்த பெண்ணை ஜீவாவுக்கும், ஜீவா காதலித்து வந்த பெண்ணைப் பார்த்தியும் மாற்றி மாற்றி திருமணம் செய்து கொண்டார்கள்.

எனவே இவர்களுடைய வேதனை எப்படி இருக்கிறது என்பதை வைத்துதான் சமீப காலங்களாக எபிசோடு ஒளிபரப்பாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் நடிகர் திரவியத்திற்கு தொடர்ந்து சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில் தற்பொழுது தெலுங்கு சீரியல் ஒன்றில் நடிக்க இருக்கிறார் எனவே ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.