தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்கள் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும் ஒரே சீரியலில் தொடர்ந்து ஏராளமான பிரபலங்களும் நடித்து வரும் நிலையில் தற்போது விஜய் டிவியில் பிரைம் டைமிங் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா.
இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வந்தது பிறகு தொடர்ந்து நான்கு வருடமாக ஒரே கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்த நிலையில்ரசிகர்கள் இந்த சீரியலை வெறுத்து வந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த சீரியல் கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகரின் மனைவி திடீரென மரணமடைந்து உள்ளார் இது சின்னத்திரை வட்டாரங்களில் பெரிதும் அதிர்ச்சனை ஏற்படுத்தி உள்ளது அதாவது 90 காலகட்டத்தில் ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலமானவர்தான் நடிகர் பரத் கல்யாண் இவர் சீரியல்களில் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் கடைசியாக இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் டாக்டர் பாரதி வேலை செய்துவரும் மருத்துவமனையின் ஓனராக நடித்திருந்தார். இவர் பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு தற்பொழுது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள் இந்நிலையில் 43 வயது மட்டுமே ஆகும் பிரியா திடீரென மரணமடைந்து இருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு இவர் பேலியோ டயட் என்ற முறையை பின்பற்றி வருகிறாராம் அதனால் ஏற்பட்ட பின் விளைவுகளால்தான் சர்க்கரை நோய் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. அதன் பிறகு சிகிச்சை எடுத்து வந்த பிரியாவிற்கு சில மாதங்களாக உடல்நிலை மிகவும் மோசமாக இருந்து வந்துள்ளது. எனவே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சர்க்கரை நோயால் ஹோமோ நிலைக்கு சென்றுள்ளார் மீண்டு வருவார் என அனைவரும் காத்திருந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் பெரிய மரணமடைந்து உள்ளார் இது நடிகர் நடிகைகள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது இவ்வாறு தன்னுடைய மனைவியை இழந்து வாடும் பரத் கல்யாண் மற்றும் அவருடைய குடும்பத்தினர்களுக்கு சின்னத்திரை நடிகர் பலரும் தங்களுடைய ஆதரவுகளை கூறி வருகிறார்கள்.