பொதுவாக சினிமாவில் சின்னத்திரை நடிகையாக இருந்தாலும் வெள்ளித்திரை நடிகையாக இருந்தாலும் கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன் மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியமாக இருந்து வருகிறது. எனவே தற்போது பிரபல சீரியல் நடிகை ஒரே மாதத்தில் 7 கிலோ குறைத்து இருக்கும் நிலையில் அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஸ்ரேயா அஞ்சன் இவர் அன்புடன் குஷி, அரண்மனை, நந்தினி உள்ளிட்ட சீரியல்களின் நடித்ததன் அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் முக்கியமாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலின் மூலம் பட்டித் தொட்டியின் பிரபலமான நிலையில் இவர் அறிமுகமான முதல் சீரியலே இவருக்கு பாராட்டைப் பெற்று தந்தது.
இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக சித்து நடித்து வந்த நிலையில் இவர்களுடைய கெமிஸ்ட்ரிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தது. இவர் இந்த சீரியலில் நடித்ததன் மூலம் இவர்களுக்கிடையே காதல் மலர்ந்த நிலையில் பிறகு ரியல் ஜோடியாக குடும்பத்தினர் சமதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடர்ந்து வரும் ஸ்ரேயா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த ரஜினி என்ற தொடரில் நடித்து வந்த நிலையில் சமீபத்தில் இந்த சீரியல் நிறைவடைந்தது. இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக உடல் எடையைக் கூட்டிய ஸ்ரேயா தனது உடல் எடையை குறைத்தே ஆக வேண்டும் என தீயாய் ஒர்க் அவுட் செய்து ஏழு கிலோ வரை குறைத்துள்ளார்.
எனவே தனது உடல் எடையை குறைப்பதற்காக தான் செய்ததையும் பகிர்ந்து உள்ளார். அதாவது தினமும் காலை வெறும் வயிற்றில் ஊற வைத்த சாம்ஜா விதை, தேன், பப்பாளி சேர்த்து சாப்பிடுவது , பாலக்கீரை, புதினா சேர்த்து நன்கு அரைத்து அதில் எலுமிச்சை சாரை சேர்த்து வெறும் வயிற்றில் குடிப்பது நிறைய காய்கறிகள் உட்கொள்வது மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ்சாக வேகவைத்த கருப்பு கடலை வேகவைத்த சுண்டல் எடுத்துக் கொள்வது அதோடு காலை 20 நிமிடம் நடைபயிற்சி செய்ய வேண்டும் இவ்வாறு இதனை எல்லாம் செய்து ஒரே மாதத்தில் ஏழு கிலோ குறைத்ததாக கூறியுள்ளார்.