கோட் முதல் மெய்யழகன் வரை.. செப்டம்பர் மாதத்தை குறி வைத்து இறங்கும் படங்களின் லிஸ்ட்

ஆகஸ்ட் முடிந்து செப்டம்பர் மாதம் தொடங்கிவிட்டது. இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து தமிழில் சொல்லிக் கொள்ளும் படியான படங்கள் எதுவும் வெளிவரவில்லை. ஆனால் மே மாதத்தில் வெளியான அரண்மனை 4 தமிழ் சினிமாவை இந்த துயரத்தில் இருந்து மீட்டெடுத்தது.

அதைத்தொடர்ந்து கருடன், மகாராஜா, தங்கலான், டிமான்டி காலனி 2 என அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. அதைத்தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் எந்தெந்த படங்கள் வெளிவருகிறது என்பதை இங்கு விரிவாக காணலாம்.

வரும் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருகிறது. அதை முன்னிட்டு 5ம் தேதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள கோட் வெளியாகிறது. ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் என அனைத்தும் பட்டையை கிளப்பி இருந்தது.

மேலும் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவும். உலக அளவில் பெரும் சாதனை நிகழ்த்தி வருகிறது. விஜய் ரசிகர்கள் பலரும் டிக்கெட் கிடைக்காமல் திண்டாடி வரும் நிலையும் இப்போது இருக்கிறது. இப்படி அமர்க்களப்படுத்தும் கோட் வசூலில் பெரும் சாதனை படைக்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இதை அடுத்து கிஷோர் எமானி இயக்கத்தில் நிவேதா தாமஸ் நடித்துள்ள 35 சின்ன கதை காடு 6ம் தேதி வெளியாகிறது. அடுத்ததாக ஜூனியர் என்டிஆர், ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடித்துள்ள தேவாரா செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்திலிருந்து சமீபத்தில் வெளியான ரொமான்டிக் பாடல் ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையும் அதிர வைத்திருந்தது. அதனாலயே படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். தெலுங்கில் உருவாகி இருக்கும் இப்படம் தமிழ் கன்னடம் மலையாளம் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.

மேலும் பிரேம்குமார் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா தயாரித்துள்ள மெய்யழகன் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது. கார்த்தி, அரவிந்த்சாமி கூட்டணியில் உருவாகி இருக்கும் இப்படம் நிச்சயம் ரசிகர்களை இம்ப்ரஸ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருக்கும் லப்பர் பந்து செப்டம்பர் 20 வெளியாகிறது. ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

சித்தாந்த் சதுர்வேதி, மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆக்சன் படமான யுத்ரா படமும் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது. மேலும் அதே செப்டம்பர் 20ஆம் தேதி ஜீவா நடித்துள்ள பிளாக், சசிகுமார் நடிப்பில் நந்தன், சட்டம் என் கையில், கடைசி உலகப் போர் ஆகிய படங்களும் வெளியாகிறது.