ஒருவழியாக முடிவுக்கு வந்தது விஜய் தொலைக்காட்சியின் முக்கிய சீரியல்.! இதுதான் கடைசி காட்சி…

vijay tv
vijay tv

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அந்த அளவு சீரியல்களை பரபரப்பாக கொண்டு வருகிறார்கள். அதேபோல் டி ஆர் பி யில் விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் இடம் பிடிப்பது வழக்கமான ஒன்றுதான். இந்த நிலையில் தற்போது செல்லமா என்ற சீரியலின்  ப்ரோமோ வீடியோ வை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு வருகிறது.

அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் ஒரு சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது என்பதை தற்போது தெரியவந்துள்ளது.  ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பார்க்கப்பட்டு வரும் செந்தூரப்பூவே சீரியல்தான் விஜய் தொலைக்காட்சியில் முடிவுக்கு வந்துள்ளது. செந்தூரப்பூவே சீரியலில் பிரிந்த குடும்பம் தற்போது ஒன்று சேர்ந்துள்ளது.

அதேபோல் மாமியாரும் ரோஜாவை மருமகளாக ஏற்றுக் கொண்டார் இந்த காட்சி கடைசி எபிசோடில் காட்டப்பட்டுள்ளது இதற்கு முன்பே இந்த சீரியல் முடிய போவதாக ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் தற்பொழுது அது உறுதியாகியுள்ளது.

செந்தூரப்பூவே சீரியல் டிஆர்பி குறைந்த ரேட்டிங் பெற்று வந்ததால் விரைவில் இந்த சீரியலை முடிப்பதற்கு விஜய் தொலைக்காட்சி முடிவு செய்தது அதனால் அவசரஅவசரமாக இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்கள்.

இதோ அந்த காட்சி

senthura poove
senthura poove