ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு கலர் ஹேர், மாடர்ன் உடை என கலக்கும் செந்தில்.! புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்.

senthill
senthill

தமிழ் சினிமாவில் தற்பொழுது வடிவேலு, விவேக், பரோட்டா சூரி, யோகி பாபு என எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்தாலும் கவுண்டமணி செந்திலுக்கு இணையாக இன்னும் தமிழ் சினிமாவில் காமெடியில் யாரும் வரவில்லை என்றுதான் கூறவேண்டும்..

கவுண்டமணி செந்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் இன்றும் மறக்காமல் தான் இருக்கிறார்கள் அந்த அளவு இவர்களின் காமெடி ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது, ஒரு காலகட்டத்தில் கவுண்டமணி செந்தில் இல்லையென்றால் படத்தை பார்க்கவே மறுப்பார்கள் அந்த அளவு மிகவும் பிரபலமடைந்தவர்கள். புதிய திரைப்படம் வந்தாலும் அதில் கவுண்டமணி செந்தில் பெயர் இடம் பெற்றுள்ளதா என்று தான் முதலில் பார்ப்பார்கள்.

இவர்கள் காமெடியை மிஞ்ச தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் இல்லை, இவர்கள் இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 15 வருடங்களாக தமிழ் சினிமாவில் காமெடியனாக ரசிகர்களை கொண்டாட வைத்தார்கள், இவர்கள் இருவரும் இணைந்து ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படத்தில் செய்த காமெடிகள் இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துவிட்டது. அந்த அளவு செந்தில் கவுண்டமணி காமெடி அந்தத் திரைப்படத்தில் மிகவும் பிரபலம்.

செந்தில் எப்படி சினிமாவுக்கு வந்தார் தெரியுமா.? செந்தில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சேர்ந்தவர் செந்தில் மிகவும் சேட்டைக்காரர் இவர்கள் வீட்டில் மளிகை கடை வைத்திருந்தார்கள் அப்பொழுது இவர் அதிகமாக குறும்புத்தனம் செய்ததால் இவரை அவரது அப்பா திட்டி விட்டார் அதனால் கோபித்துக்கொண்டு பஸ் ஏறி சென்னை வந்தார் செந்தில்.

senthil
senthil

அங்கு தினக்கூலி வேலையை தான் செந்தில் செய்து வந்தார், அவர்கள் மூலம் கிடைத்த நட்பின் மூலம் மேடை நாடகத்தில் நடித்து வந்தார், அந்த நாடகத்தைப் பார்த்த பிரபலங்கள் மூலம் செந்திலுக்கு தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது ஆனால் செந்தில் முதன்முதலில் மலையாளத் திரைப்படத்தில் நடித்தார்.

அதன் பிறகுதான் கவுண்டமணி-செந்தில் என்ற காமெடி மிகவும் பிரபலமடைந்தது, இந்த நிலையில் செந்தில் தற்பொழுது பிளாக் ஷீப் உருவாக்க இருக்கும் ஆப் ஒன்றின் விளம்பரத்தில் நடித்துள்ளார், அதற்காக தனது உடை உடல் என அனைத்தையும் மாற்றி வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார்.

senthil
senthil