தமிழ்சினிமாவில் நடிகர்கள் எவ்வளவு வயதானாலும் ஹீரோவா தான் நடித்து வருகிறார்கள், ஆனால் நடிகைகள் கொஞ்சம் வயதானாலும் அவர்கள் அக்கா, அம்மா போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது, அந்த வகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருப்போம்.
அப்படி அம்மா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் செந்தில்குமாரி, இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமடைந்தவர், இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற தொடரில் அன்பான மாமியாராக நடித்து வந்தவர்.
இவரின் ஸ்பெஷல் என்னவென்றால் இவரின் குரல் தான், இவரது குரல் கீச் குரல் போலவே இருக்கும், தளபதி விஜயின் மெர்சல் திரைப்படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் கண் கலங்க வைத்தார் மேலும் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார், நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தன்னுடைய மிகப்பெரிய ரசிகையான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.
இப்படி இருக்க விஜய் பற்றிய ஒரு உண்மையை செந்தில்குமாரி கூறியுள்ளார் இதுகுறித்து அவர் கூறுகையில், நான் திருமணத்திற்கு பிறகுதான் நடிக்கவே ஆரம்பித்தேன், நான் தளபதி விஜய்யை திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்டேன் ஏனென்றால் நான் அவரின் தீவிர ரசிகை அவரை பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு நீண்ட நாளாக இருந்தது திருப்பாச்சி திரைப்படத்தில் என்னுடைய சகோதரி நடித்தார்.
அப்பொழுது விஜய்யை நேரில் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையோடு கிளம்பினேன் ஆனால் என் கணவர் தடுத்தார் அவர் தள்ளி விட்டதில் என் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது அதையும் மீறி தளபதிவிஜய் நான் பார்க்கச் சென்றேன் இவ்வாறு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.