கதாநாயகனாக நடித்துள்ள செந்தில்.! இணையத்தில் வைரலாகும் அதிரடி புகைப்படங்கள்.!

senthil

வெள்ளித்திரையில் ஒரு காலத்தில் காமெடி நடிகர்களுக்கு எல்லாம் குருவாக விளங்கிய நடிகர்கள் தான் செந்தில் மற்றும் கவுண்டமணி இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல திரைப்படங்கள் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்திருக்கும் அந்த காலத்தில் இவர்கள் இல்லாமல் எந்த திரைப்படங்களும் இல்லை என்ற அளவிற்கு இவர்கள் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்துவிட்டது.

மேலும் கவுண்டமணி இல்லாமலும் செந்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் பார்த்தால் சூர்யாவின் நடிப்பில் வெளியாகிய தானா சேர்ந்த கூட்டம் என்ற திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் செந்தில் நடித்திருப்பார்.

மேலும் செந்தில் தற்போது கதாநாயகனாக ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறாராம் ஒரு கிடாயின் கருணை மனு என்ற திரைப்படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா என்பவர் இயக்கத்தில் செந்தில் நடித்துள்ளாராம் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் சமீரா பரத் ராம் தயாரித்து உள்ளதாக கூறப்படுகிறது.

senthil
senthil

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது கடந்த மார்ச் மாதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.இதனைதொடர்ந்து செந்தில் தனது டப்பிங் பணிகளையும் முடித்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

senthil

அதற்கான புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் பார்ப்பதற்கு செந்தில் மிகவும் ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த திரைப்படத்தை பார்ப்பதற்காக இவரது ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.