காதும் காதும் வைத்தது போல தங்கச்சியின் நிச்சயதார்த்தத்தை முடித்த செந்தில் கணேஷ்..! அடேங்கப்பா மாப்பிள்ளையை பார்த்தீர்களா..?

senthiganesh

விஜய் டிவியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர் மனதில் இடம் பிடித்தவர்கள் தான் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இவர்களைப் பற்றி பெரிதாக ஒன்றும் சொல்லத் தேவையில்லை ஏனெனில் அவர்களைப் பற்றி தெரியாதவர்களே கிடையாது.

செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இவர்கள் இருவருமே காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் அந்த வகையில் இவர்கள் இருவருமே இணைந்து சூப்பர் சிங்கர் 6 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு  மேடையில் பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்கள்.

மேலும் தன்னுடைய அழுத்தமான குரலில் மூலமாக ஏகத்துக்கு பாடலை பாடி செந்தில் கணேஷ் பைனலுக்கு சென்றது மட்டுமல்லாமல் வெற்றியும் பெற்று புது வீட்டை பரிசாக வென்றார். மேலும் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியானது செந்தில் கணேசன் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது.

இதனை தொடர்ந்து தற்போது சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து பாடல்கள் பாடுவது மட்டுமல்லாமல் நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லின் சாப்ளின் என்ற திரைப்படத்தில் கூட “என்ன மச்சான் சொல்லு புள்ள ” என்ற பாடலை பாடி தங்களுடைய குறைகளை தமிழ் சினிமாவில் ஆழமாக பதித்து விட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரின் குரலில் ஒளியாகும் பாடலை கேட்க அவ்வளவு ஆர்வமாக இருப்பார்கள் அதுமட்டுமில்லாமல் இவர்கள் தமிழ்நாடு இந்தியா மட்டும் அல்லாமல் வெளிநாட்டிலும் சென்று கச்சேரிகள் செய்து உள்ளார்கள்.

senthiganesh
senthiganesh

இந்நிலையில் செந்தில் கணேஷ் கரிகாலன் என்ற திரைப்படத்தில் கூட ஹீரோவாக நடிக்க உள்ளாராம். நமது செந்தில் கணேஷ்க்கு ஒரு தங்கை உள்ளார் அவரும் ஒரு பாடகி என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் அவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது இதனை செந்தில் கணேஷ் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களிடையே பகிர்ந்துள்ளார்.

senthiganesh