மறைந்து விட்டாரா சுசீந்திரனின் அம்மா.? இணைய தளத்தில் வெளிவந்த பரபரப்பான தகவல்.?

suseenthiran
suseenthiran

சிம்பு தற்போது மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு அவர்கள் இயக்கி வருகிறார் இப்படத்திற்கான சூட்டிங் பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் சிம்பு இந்த திரைப்படத்திற்கு முன்னரே இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த திரைப்படம் நேற்று பொங்கலை முன்னிட்டு ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது வெளிவந்த நாளிலேயே அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இயக்குனர் சுசீந்திரன் பற்றி ஒரு பரபரப்பான தகவல் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது அந்த தகவல் என்னவென்று கேட்டால் இயக்குனர் சுசீந்திரனின் அம்மா இன்று காலை காலம் ஆகி விட்டாராம்.

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை மரணம் அடைந்துள்ளார் என்று சமூக வலைதள பக்கங்களில் இந்த தகவல் வைரலாகி வருகிறது.