சூர்யாவுக்கு ஜோடியாகும் சென்சேஷனல் நடிகை..! உச்சகட்ட சந்தோஷத்தில் சிறுத்தை சிவா

surya
surya

எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க நடிகர் சூர்யா பிரபல வெற்றிப்பட இயக்குனர் சிறுத்தை சிவா உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 42வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு வரலாற்று கதையை மையமாக வைத்து உருவாகி உள்ளது.

சூர்யா இது போன்ற கதைகளில் நடிக்கும் படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக இருந்து வந்துள்ளன அந்த வகையில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ஏழாம் அறிவு திரைப்படம் இவருக்கு முதல் 100 கோடியை பெற்று தந்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோல இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. சூர்யா 42 திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது இந்த படத்தின் படப்பிடிப்பு 50% முடிவடைந்த நிலையில் மீதி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சூர்யாவுடன் இணைந்து இதில் யோகி பாபு, திஷா பாட்னி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக யார் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறித்து தகவல்களை தெரிகிறது அதன்படி பார்க்கையில்..

கடந்த ஆண்டு வெளிவந்த சீதாராமம் திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து பிரபலமான மிருணாள் தாகூர் தான் இந்த திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் என கூறப்படுகிறது. இவர் இணைந்தது சூர்யா 42 படத்திற்கு இன்னும் பிளஸ் ஆக அமைந்துள்ளது என பலரும் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.