இளம் தலைமுறை இயக்குனர்களுக்கு அதிக பட வாய்ப்புகளை முன்னணி நடிகர்கள் சமிப காலமாக கொடுத்து வருகின்றனர் அந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் சமீபகாலமாக இளம் தலைமுறை இயக்குனர்களுக்கு தனது படங்களை கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் காலா, கபாலி போன்ற படங்களை இயக்க இளம் இயக்குனர் பா. ரஞ்சித்துக்கு வாய்ப்புகளை கொடுத்தார். அதே போல கார்த்திக் சுப்புராஜ்க்கு பேட்ட என்ற திரைப்படத்தை கொடுத்தார். இப்படி திரை உலகில் முன்னேறி வரும் இளம் இயக்குனர்களுக்கு நல்லதொரு வாய்ப்பை ரஜினி கொடுத்து வருகிறார் அந்த வகையில் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இளம் இயக்குனரான ஒருவருக்கு பட வாய்ப்பை வழங்கியுள்ளார்.
இச் செய்தி முன்னணி இயக்குனர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது அதாவது தற்போது சீனியர் இயக்குனர்களை ஒதுக்கிவிட்டு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்ட இளம் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி என்பவரை தனது அடுத்த படத்தில் கமிட் செய்ய ரஜினியின் முனைப்பு காட்டி உள்ளார்.
அண்ணாத்த படத்திற்கு முன்பாகவே சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் முன்னணி இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் பல கதைகளைக் கூறி உள்ளார் அதை எல்லாம் கேட்டுவிட்டு அமைதியாக இருந்த ரஜினி தற்போது அவரை ஒதுக்கி விட்டு தேசிங்கு பெரியசாமி இயக்குனருடன் கதை கேட்டு கைகோர்க்க ரெடியாக இருக்கிறார்.
ஒரு காலகட்டத்தில் ரஜினியின் பிரதானமான இயக்குனர்களில் முதன்மையானவராக பார்க்கப்பட்டவர் கேஎஸ் ரவிக்குமார் அவரையே தள்ளிவிட்டு இவரை செலக்ட் செய்தது கோலிவுட் வட்டாரமே ஷாக்கில் உள்ளது.
அண்ணாத்த சூட்டிங் இறுதிகட்டத்தை எட்டி உடன் ரஜினி தேசிங்கு பெரியசாமியை அழைத்து அடுத்த படத்துக்கான அறிவிப்பை கூறலாம் எனவும் கூறப்படுகிறது இதைத்தொடர்ந்து அவர் கார்த்திக் சுப்புராஜ் உடன் மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி வருகின்றன.