மாடர்ன் லுக்கில் பிறந்தநாள் கொண்டாடிய செம்பருத்தி ஷபானா!! வைரலாகும் புகைப்படம்.

shabhana
shabhana

வெள்ளித்திரையை விட சின்னத்திரை தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் டாப் சீரியல்களில் ஒன்றாக திகழ்வது தான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல்.

இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது உள்ள குழந்தைகள், இளைஞர்கள், காதலர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்துவரும் பார்வதி என்ற சபானா தான் இதற்கு முக்கிய காரணம். இந்த சீரியலின் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில்  இவர் ஆகஸ்ட் 29ஆம் தேதி பிறந்தநாளை ஒரு சில நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அதில் தேவதை போன்று மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். செம்பருத்தி சீரியலில் தாவணி மற்றும் புடவையில் பார்த்த பார்வதிவையை விட தற்பொழுது மாடர்ன் உடையில் பார்க்கும் சபானாவை இன்னும் அழகாக இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.